ஆரோக்கியம்
பூண்டு கறிவேப்பிலை தொக்கு ரெசிபி – இட்லி, தோசை, சாதத்திற்கேற்ற சுவையான சைடிஷ்!
Published
8 மாதங்கள் agoon
By
Poovizhi
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடியைச் சாப்பிடுவதே வழக்கம். ஆனால் உண்மையில் தொக்கு வகைகள் இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக பூண்டு கறிவேப்பிலை தொக்கு மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இந்த தொக்கை 1 வாரம் வரை கெடாமல் வைத்து சாப்பிடலாம். இது சாதத்துடனும், இட்லி, தோசை, சப்பாத்தியுடனும் அருமையான சைடிஷாக இருக்கும். கறிவேப்பிலை மற்றும் பூண்டு இரண்டுமே உடலுக்கு ஆரோக்கியம் தரும் தன்மைகள் கொண்டவை. எனவே சுவையுடன் ஆரோக்கியமும் கிடைக்கும்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
புளி – ஒரு நெல்லிக்காய் அளவு
வரமிளகாய் – 8
மல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 ஸ்பூன்
வெந்தயம் – ½ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – 1 டீஸ்பூன் (பொடித்தது)
கறிவேப்பிலை – 2 கைப்பிடி அளவு
பூண்டு – 1 கைப்பிடி அளவு (தோல் உரித்தது)
பெருங்காயம் – 2 சிட்டிகை
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி புளி, வரமிளகாய் வதக்கவும்.
பின்னர் மல்லி, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
குளிரவைத்த பின் மிக்சியில் உப்பு சேர்த்து அரைக்கவும்.
அதில் வெல்லம், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.
கடாயில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின்னர் அரைத்த விழுது, மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
எண்ணெய் மேலே வந்தவுடன் பூண்டு கறிவேப்பிலை தொக்கு ரெடி.
சுவையான இந்த தொக்கு சாதத்திற்கும், இட்லி-தோசைக்கும் சிறந்த சைடிஷ் ஆக இருக்கும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.











