Connect with us

சினிமா செய்திகள்

பீஸ்ட் கதாநாயகி செய்த காரியம்: பொதுமக்கள் ரியாக்சன் என்ன தெரியுமா?

Published

on

தளபதி விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் நாயகியான பூஜா ஹெக்டே செய்த காரியத்தால் அவருக்கு பொதுமக்களின் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க பூஜாஹெக்டே சமீபத்தில் ஒப்பந்தமானார். இவர் சென்னையில் நடைபெற்ற பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பதும் இந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பீஸ்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை பூஜா ஹெக்டே ‘ஆல் அபவுட் லவ்’ என்ற புதிய அறக்கட்டளையை தனது நண்பர்களுடன் சேர்ந்து துவக்கியுள்ளார். இதன் மூலம் அவர் நலிவுற்ற மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நலிவுற்ற மக்களுக்காக சேவை மையம் துவங்கி இருக்கும் நடிகை பூஜா ஹெக்டேவின் முயற்சிக்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களுக்கு பொருளாதார உதவிகளை செய்து வருகிறோம் என்றும் அது மட்டுமின்றி மருத்துவ வசதி, ரேஷன் பொருட்களையும் கொடுத்து வருகிறோம் என்றும் பூஜா ஹெக்டே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

இந்த சேவை மையத்தை மேலும் விரிவுபடுத்தி இன்னும் நிறைய பேர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதே தனது எதிர்கால திட்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திரைப்படங்களில் நடித்து கிடைக்கும் பணத்தை வைத்து பல்வேறு தொழில் தொடங்கி மேலும் மேலும் பணம் சம்பாதிக்கும் நடிகைகள் மத்தியில் பூஜா ஹெக்டே வித்தியாசமாக ஏழை எளியவர்களுக்கு அறக்கட்டளை தொடங்கியுள்ளது பெரும் பாராட்டுக்குரியது என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?