சினிமா செய்திகள்
நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ டிரைலர்: ஹாட்ஸ்டார் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published
1 year agoon
By
Shiva
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ள நிலையில் அந்த டிரைலரில் இந்த படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் த்ரில் கதையம்சம் கொண்டது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான இரண்டு நிமிட ட்ரைலரில் அதிரடி காட்சிகள் உள்ளன என்பதும் குறிப்பாக நயன்தாராவுக்கும் வில்லன் அஜ்மலுக்கும் இடையேயான பரபரப்பான காட்சிகள் இந்த ட்ரெய்லரில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிரைலரின் இறுதியில் அஜ்மல் மற்றும் நயன்தாரா மாறி மாறி சவால் விடும் காட்சிகள் படத்தை பார்க்கவேண்டும் என்று தூண்டியுள்ளன.
ஹாட்ஸ்டாரில் ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா, அஜ்மல், மணிகண்டன், சரண் உள்பட பலர் நடித்து இந்த திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது என்பதும் ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவில், கிருஷ் கோபாலகிருஷ்ணன் இசையில், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நயன்தாரா நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் ’நெற்றிக்கண்’ திரைப்படமும் நயன்தாராவுக்கு இன்னொரு வெற்றிப்படமாக மாறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
You may like
-
AK 62 படம் நல்லா பண்ணனும் ஐயப்பா! சபரிமலையில் விக்னேஷ் சிவன்; அஜித் ரசிகர்கள் வேண்டுதல்!
-
’தெலுங்கு வாடை ரொம்ப ஓவரா இருக்குதே.. அதற்குள் நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்ற ‘வாரிசு’
-
’வாரிசு’ டிரைலர் ரிலீஸ் தேதி, சென்சார் தகவல்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
-
என்னை மாதிரி ஒரு அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா? அஜித் அதகளப்படுத்தும் ‘துணிவு’ டிரைலர்
-
அடேங்கப்பா.. நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
-
தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடும் நயன் – விக்கி: வைரல் புகைப்படங்கள்!