சினிமா
SSMB28-வது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மகேஷ் பாபு!

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு தனது SSMB28வது படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்து தனது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளார்.
மகேஷ் பாபு நடிக்கும் படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக டோலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றன. விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருப்பதால் முன்னணி நடிகராக தொடர்ந்து வலம் வருகிறார்.

#image_title
ஒரு படத்துக்கு சுமார் 80 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் மகேஷ் பாபு, கடந்த ஆண்டு பாலிவுட் திரையுலகால் தனக்கான சம்பளத்தை கொடுக்க முடியாது என்றே இந்தி படங்களில் நடிக்க மாட்டேன் என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார்.
அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க உள்ள மகேஷ் பாபு தற்போது இயக்குநர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அலா வைகுந்த புரமுலோ படத்திற்கு பிறகு த்ரி விக்ரம் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

#image_title
தீபாவளிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு சங்கராந்தி பண்டிகையை குறிவைத்து ஜனவரி 23ம் தேதி 2024ம் ஆண்டு வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.
இந்த படம் வெளியான பின்னர் தான் இயக்குநர் ராஜமெளலி இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் அடுத்த ஆண்டு இணைய உள்ளார் மகேஷ் பாபு என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.