உலகம்
சுந்தர்பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தகவல் திருட்டு: விற்பனை செய்ய ஹேக்கர் திட்டமா?
Published
1 month agoon
By
Shiva
சுந்தர்பிச்சை உள்பட 40 கோடி டுவிட்டர் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டு உள்ளதாகவும் அந்த தகவல்களை விற்பனை செய்யப் போவதாகவும் வெளியாகியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களாக டுவிட்டர் நிறுவனம் குறித்த செய்திகள் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறது என்பதும் குறிப்பாக எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பரபரப்பான செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள செய்திகளில் ஒன்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட டுவிட்டரில் உள்ள 40 கோடி பயனாளர்கள் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர் ஒருவர் திருடி வைத்திருப்பதாகவும் அதை அவர் விற்பனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேலிய உளவுத்துறை நிறுவனத்தின் அறிக்கையின்படி 40 கோடி டுவிட்டர் பயனாளிகளின் மின்னஞ்சல், பயனர் பெயர்கள், தொலைபேசி எண் உள்பட பல தகவல்கள் மூலம் திருடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 40 கோடி ரூபாய் பயனாளர்களின் டேட்டா விற்பனை செய்யப் போகிறேன் என்றும் அந்த ஹேக்கர் அறிவித்து அதன் பின் திடீரென அந்த தகவலை டெலிட் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோடிக்கணக்கான பயனர்களைக் தரவுகள் ஏற்கனவே ஒரு சில முறை திருடப்பட்டதாக கூறப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு முறை திருடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5.4 மில்லியன் டுவிட்டர் பயனர்களின் டேட்டாக்கள் கசிந்தது என்றும் இது குறித்த விசாரணை முடியும் முன்பே தற்போது 40 கோடி பயனாளர்களின் டேட்டா திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
40 கோடி பயனாளர்களின் மின்னஞ்சல் ஐடி, கோடி கணக்கான பயனர்களின் தொலைபேசி எண்கள் போன்ற தனிப்பட்ட விவரங்களை தவறாக ஹேக்கர் பயன்படுத்தினால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
You may like
-
செவ்வாய்கிழமை வேலைநீக்கம், வெள்ளிக்கிழமை 50% கூடுதல் சம்பளத்துடன் புது வேலை: அதிர்ஷ்டக்கார பெண்ணின் டுவிட்!
-
2 ஆண்டுகளுக்கு பின் மீண்டு வந்தது கங்கனாவின் ட்விட்டர் … முதல் ட்விட்டே என்ன தெரியுமா?
-
12,000 போதாது, இன்னும் வேலைநீக்கம் செய்யுங்கள்.. சுந்தர் பிச்சைக்கு ஐடியா கொடுக்கும் கோடீஸ்வரர்!
-
பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் சுந்தர் பிச்சையும் சத்ய நாதெள்ளாவும் தான்… ஆவேச கருத்துக்கள்!
-
மீண்டும் டுவிட்டரில் வேலைநீக்க நடவடிக்கை.. கொடுத்த வாக்கை காப்பாற்றாத எலான் மஸ்க்!
-
நீதிமன்றம் செல்கிறார்களா வேலைநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் ஊழியர்கள்.. சிக்கலில் எலான் மஸ்க்