Connect with us

உலகம்

கூகுளில் வேலை பார்க்கின்றீர்களா? உடனே வேறு வேலை தேடுங்கள்: அதிர்ச்சி தகவல்

Published

on

கூகுள் நிறுவனத்தில் பணி செய்யும் சுமார் 10 ஆயிரம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்படலாம் என்றும் எனவே கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு வேலையை இப்போது இருந்தே தேட ஆரம்பியுங்கள் என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகின் நம்பர் ஒன் தேடு தளமான கூகுள் நிறுவனத்தில் சுமார் ஒரு லட்சத்து 87 ஆயிரம் பேர் உலகம் முழுவதும் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் உள்பட பல்வேறு காரணங்களால் கூகுள் நிறுவனத்தின் வருவாய் குறைந்து உள்ளதை அடுத்து செலவை குறைக்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாகவும் முதல்கட்டமாக 6 சதவீதம் ஊழியர்களை அதாவது சுமார் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து முழுநேர ஊழியர்களில் 6 சதவீதம் பேரும் மோசமாக செயல்படும் பிரிவின் கீழ் வருவார்கள் என்றும் இது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் எப்போது வேண்டுமானாலும் 6% வேறு வேலை நீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கூகுள் நிறுவனம் புதிய பணியாளர்களை வேலைக்கு பணியமர்த்துவதை நிறுத்தி வைத்துள்ள நிலையில் தற்போது சரியாக செயல்படாத ஊழியர்களை பணி நீக்கம் செய்யப் போவதாகவும் தகவல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் நட்நத ஊழியர்கள் கூட்டத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பேசியபோது எதிர்காலத்தைக் கணிப்பது கடினம் என்றும் பணி நீக்கம் குறித்த உறுதிபாடுகளை இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியது கட்டாயத்தில் நிறுவனம் உள்ளது என்றும் சிறப்பாக நாம் செயல்பட வேண்டிய வேண்டியது மிகவும் முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Timers and stripe.