தொழில்நுட்பம்
விரைவில் ட்விட்டரில் வீடியோ, ஆடியோ கால் வசதி: எலான் மஸ்க் அறிவிப்பு!

இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் அதிக ஆர்வத்துடன் உள்ளனர். சினிமா மற்றும் விளையாட்டுப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பதிவுகளைப் போட்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒன்று தான் ட்விட்டர். கடந்த சில நாட்களாகவே ட்விட்டரில் சில புதிய அப்டேட்ஸ் வந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தற்போது, ட்விட்டரில் வீடியோ மற்றும் ஆடியோ கால்ஸ் வசதியும் வர உள்ளது.
ட்விட்டர்
உலக அளவில் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 44 பில்லியன் டாலருக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பல மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.
வீடியோ, ஆடியோ கால்ஸ்
இந்நிலையில், ட்விட்டரில் மொபைல் எண் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ கால்ஸ் பேசும் வசதியை ட்விட்டர் நிறுவனம் புதியதாக கொண்டு வருகிறது.
சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில், இந்த புதியவிரைவில் வசதியை அறிமுகப்படுத்த இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்து உள்ளார். இதனால் ட்விட்டர் பயனர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தினை, விலைக்கு வாங்கியதில் இருந்து எலான் மஸ்க், இந்நிறுவனத்தை இலாபகரமானதாக மாற்றுவதற்கான அனைத்துப் பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.