உலகம்
பாதியாக குறைந்தது டுவிட்டரின் மதிப்பு.. எலான் மஸ்க்கிற்கு 20 பில்லியன் லாஸ்..!

ட்விட்டர் நிறுவனத்தை எலாம் மஸ்க் கடந்த ஆண்டு 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் இப்போது அந்நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்து விட்டதாகவும் இதனால் எலான் மஸ்க் அவர்களுக்கு சுமார் 20 மில்லியன் டாலர் நஷ்டம் என்றும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் அவர்கள் 44 பில்லியன் கொடுத்து டுவிட்டரை வாங்கினார். அவர் ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு அதிரடியாக சில மாற்றங்கள் செய்தார் என்பதும் குறிப்பாக பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்தார் என்பதும் தெரிந்ததே.
ஆனால் ட்விட்டர் நிறுவனம் அவருக்கு சாதகமாக எதுவுமே செயல்படவில்லை என்றும் அவரது தலைமையின் கீழ் டுவிட்டர் நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தனியார் நிறுவனம் ஒன்று எடுத்த கணக்கெட்டுத்தின்படி தற்போது ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு 20 பில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறைவான மதிப்பீட்டுக்கான காரணம் டுவிட்டர் நிறுவனத்தில் தற்போது மிகக் குறைந்த ஊழியர்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முன்பு 7500 பணியாளர்கள் இருந்தனர் என்றும் ஆனால் தற்போது 2000 ஊழியர்களுக்கும் குறைவாக உள்ளது என்றும் அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மேலும் டுவிட்டர் நிறுவனத்தின் தற்போது விளம்பரதாரர்கள் பலர் விலகி விட்டார்கள் என்றும் இதனால் அந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. பல பெரிய விளம்பரதாரர்கள் விலகி விட்டதால் மிகப்பெரிய நிதி ஆதாரத்தை ட்விட்டர் இழந்துவிட்டது என தெரிய வந்துள்ளது. இருப்பினும் ட்விட்டர் நிர்வாகத்தை தனது கௌரவமாக பார்க்கும் எலான் மஸ்க் கண்டிப்பாக அதை லாபத்துக்கு மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.