உலகம்
ஊழியர்களின் வேலைநீக்கத்தை தடுக்க தனது பதவியை ராஜினாமா செய்த முதலாளி!

இந்தியாவை சேர்ந்த அமெரிக்கர் ஒருவர் அமெரிக்காவில் பத்திரிக்கை நடத்தி வரும் நிலையில் பொருளாதார சிக்கல் காரணமாக சில ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலையில் திடீரென தனது வேலையை அவர் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் முன்னணி பத்திரிகை ஒன்றை நடத்தி வரும் இந்திய அமெரிக்கர் பீட்டர் பாட்டியா என்பவர் தனது மேனேஜிங் டைரக்டர் பணியை ராஜினாமா செய்வதாகவும் தனது சம்பளம் நிறுத்தப்பட்டால் அதன்மூலம் பல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
எங்களது பத்திரிகையைத் தொடர்ந்து பொருளாதார ரீதியாக கடினமான காலகட்டத்தில் இருக்கிறது என்றும் இதன் காரணமாக ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் தன்னுடைய சம்பளம் மிகவும் அதிகமாக இருப்பதால் தான் வேலையை விட்டு விலகினால் அதன் காரணமாக மிச்சப்படும் பணத்திலிருந்து பல ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
எனக்கு பிரீலன்சர் உள்பட பல்வேறு வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்றும் அதன் மூலம் என்னால் சம்பாதித்துக் கொள்ள முடியும் என்றும் ஆனால் தனது ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டால் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பதால் நிறுவனத்தின் நிதி நிலைமையை கணக்கில் கொண்டு தான் ராஜினாமா செய்வதாக கூறினார்.
பாட்டியா அடுத்தாண்டு தொடக்கத்தில் இருந்து தனது சொந்த நிறுவனத்தில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாட்டியாவின் தந்தை லக்னோவை சேர்ந்தவர் என்பதும் அவரது குடும்பத்தில் இருந்து பத்திரிகைத் தொழிலை நடத்தும் முதல் நபர் பாட்டியா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தகவல் தொடர்பு படித்த பாட்டியா அமெரிக்கா முழுவதும் உள்ள பல இணையதளங்களில் பணிபுரிந்து அதன்பிறகு 2010ஆம் ஆண்டு சொந்தமாக பத்திரிகை தொடங்கினார். அந்த பத்திரிகை இன்று அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்று உள்ளது என்பதும் அவரது செய்தி நிறுவனங்கள் 10 புலிட்சர் பரிசுகளை வென்று உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.