Connect with us

சினிமா செய்திகள்

தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!

Published

on

தனுஷ் தம்பிக்கு எனது நன்றி என நடிகர் இயக்குனர் பார்த்திபன் தனது டுவிட்டரில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் என்ற திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படம் ஜூலை மாதம் வெளியாகும் என ஏற்கனவே பார்த்திபன் அறிவித்திருந்த நிலையில் சற்று முன் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரவின் நிழல் திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான போஸ்டரும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரவின் நிழல் திரைப்பட உலகின் முதல்முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தனது படத்தின் ரிலீஸ் தேதியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட தனுஷுக்கு ’நன்றி தம்பி’ என பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
me profile.