சினிமா செய்திகள்
விக்ரம் படத்தையும் விட்டு வைக்காத ரெட் ஜெயண்ட் மூவீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

கடந்த சில மாதங்களாக குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்தபின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் அனைத்து மாஸ் நடிகர்களின் திரைப்படங்களையும் ரிலீஸ் செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பல நடிகர்களின் படங்கள் தொடர்ச்சியாக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தால் தான் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
மாஸ் நடிகர்களின் படங்களை உதயநிதி மிரட்டி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தாலும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய வேண்டும் என மாஸ் நடிகர்களே விரும்புவதாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் கமல், ரஜினி, விஜய், சூர்யா படங்களை அடுத்து விக்ரம் நடித்த படத்தையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ திரைப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி ரிலீசாக உள்ள இந்த படத்தை மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து மற்ற படங்களை போல் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெற்றிப் படமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Cobra gets bigger !
It's '#Lalitkumar & #UdhayanidhiStalin' presents #ChiyaanVikram's #Cobra ! #CobraFromAugust11
Excited to associate with @Udhaystalin Sir & @RedGiantMovies_#CobraWithRedGiantMovies
An @AjayGnanamuthu Film 🎬
An @arrahman Musical 🥁@SonyMusicSouth pic.twitter.com/otUZWg9bw9— Seven Screen Studio (@7screenstudio) June 27, 2022