Connect with us

சினிமா செய்திகள்

கமல் தயாரிப்பில் ரஜினி படம்: மீண்டும் பேச்சுவார்த்தை?

Published

on

கமலஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் குறித்த பேச்சுவார்த்தை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் திடீரென ரஜினிகாந்த் இந்த படத்தில் நடிக்க முடியாது என பின்வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

இதற்கு அரசியலில் நுழைவது, உடல் நலம் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த பேச்சுவார்த்தை மீண்டும் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் கமல்ஹாசன் கவுரவ வேடத்தில் நடிப்பார் என்றும் இந்த படத்தை விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது .

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விஜய்யின் அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் கமல்-ரஜினி இணையும் படத்தின் வாய்ப்பும் வந்துள்ளதால் இரண்டில் எதை அவர் தேர்வு செய்வார் என்பதுதான் தற்போதைய கேள்வியாக உள்ளது .

ஒருவேளை விஜய் படத்தை முடித்துவிட்டு அதன்பின்னர் ரஜினி கமல் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் கமல் ரஜினி மீண்டும் இணைந்து நடிக்கும் திரைப்படம் உருவானால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Mr handyman.