Connect with us

சினிமா

ஜெயிலர் ரஜினிகாந்த் உடன் போட்டிப் போடும் ஜெயம் ரவி.. இறைவன் ரிலீஸ் எப்போ தெரியுமா?

Published

on

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அதே ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படத்துக்குப் போட்டியாக ஜெயம் ரவி தனது படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அகிலன் திரைப்படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், அடுத்ததாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

#image_title

பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 கோடி வசூல் வேட்டை நடத்திய நிலையில், இரண்டாம் பாகம் வெறும் 350 கோடி மட்டுமே வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ஹாட்ரிக் அடிக்கும் முயற்சியில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் படம் வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி வெளியாகிறது.

#image_title

வாமணன், என்றென்றும் புன்னகை மற்றும் மனிதன் என வித்தியாசமான படங்களை கொடுத்து வந்த இயக்குநர் அகமது பல ஆண்டுகள் கேப்பிற்கு பிறகு எடுத்துள்ள இறைவன் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், 2 வார இடைவெளியில் ஜெயம் ரவி தனது இறைவன் படத்தை களமிறக்க காத்திருக்கிறார்.

தனி ஒருவன் படத்தைத் தொடர்ந்து நயன்தாராவுடன் ஜெயம் ரவி இணைந்து நடித்துள்ள நிலையில், அந்த படத்தை போலவே இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Embed videos directly on your page, showcase your music playlists, add countdown timers for your next launch, and much more..