Uncategorized
தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்தில் குறைந்த விலையில் குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மனோ தங்கராஜ்.

அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று சட்டசபையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில், எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களைப் பசுமை தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களாக சர்வதேச தரத்தில் 40 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும். அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கை உருவாக்கப்படும்.
100 புதிய சேவைகள் இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் வழங்கப்படும். இதற்காக 1.20 கோடி ரூபாய் பயன்படுத்தப்படும். தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும். தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் 2 மற்றும் 3-ஆம் கட்ட நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங் மற்றிம் காமிக்ஸ், தகவல் தொழில்நுட்ப துறைகளுக்கான சீர்மிகு மையம் 10 கோடி ரூபாயில் அமைக்கப்படும். 20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 184 கோடி ரூபாயில் அதிவேக இணைய இணைப்பு வழங்கப்படும். மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், அதிவேக இணைய சேவை வழங்கப்படும். இதற்காக அரசு 100 கோடி ரூபாய் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.