தமிழ்நாடு
தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ள நிலையில் மேலும் 8 புதிய மாவட்டங்கள் உருவாக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். இதில் முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் எனவும் தமிழக சட்டசபையில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து ஆரணியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்தார். மேலும் திமுக கொறடா கோவி செழியன் கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தமிழகத்தில் நிறைய பெரிய மாவட்டங்கள் உள்ளன அவற்றில் 8 மாவட்டங்களை பிரிக்க என்னிடத்திலும் முதல்வரிடத்திலும் கோரிக்கைகள் வந்துள்ளன. புதிய மாவட்டங்களை பிரிப்பதற்கான சட்டப்படியான தகுதிகள் அந்த பகுதிகளுக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மேலும் தேவையான நிதி நிலை அந்த மாவட்டங்களுக்கு இருக்க வேண்டும். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்தார்.