சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் ட்ரெய்லர் ரிலீஸ்!
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து தொடர்ச்சியாக ரிலீசாக அரை டஜன் படங்கள் இருக்கின்றன. அதில், அடுத்த மாதம் ஏப்ரல் மாதம் 12ம் தேதி வாட்ச்மேன் படம் வெளியாகவுள்ளது. அந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் சவுகிதார் பரப்புரையை சினிமா புரொமோஷனாக மாற்றி அண்மையில் வாட்ச்மேன் படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், தற்போது அந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ், யோகிபாபுவுடன் நாய் ஒன்றும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது. விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.




















