சினிமா
தனுஷின் வாத்தி ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா? அடுத்த மிரட்டல் ரெடி!

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் விஜய்யின் வாரிசு படங்களை தெலுங்கு இயக்குநர்கள் இயக்கிய நிலையில், அடுத்ததாக தனுஷின் வாத்தி படமும் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் உருவாகி உள்ளது. வரும் பிப்ரவரி 17ம் தேதி வாத்தி படம் வெளியாக உள்ள நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா நடைபெறும் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல படங்கள் வெளியாகின. இந்நிலையில், முதல்முறையாக டோலிவுட்டில் இந்த ஆண்டு தனுஷ் படம் பைலிங்குவல் படமாக வெளியாக உள்ளது.

#image_title
மாறன் திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான நிலையில், கொஞ்சம் கூட ஓடவே இல்லை. அதன் பிறகு பாலிவுட் படமான அட்ரங்கி ரே திரைப்படமும் ஓடிடியில் வெளியாகி சுமாராக ஓடியது.
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான தி கிரேமேன் திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் தியேட்டரில் வெளியாகி 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை வாரிக் குவித்தது.

#image_title
அதன் பின்னர் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவான நானே வருவேன் பேய் படம் பொன்னியின் செல்வன் படத்துடன் போட்டியிட்ட நிலையில், ஹிட் அடிக்க தவறியது.
இந்நிலையில், டோலிவுட் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்தா மேனன், சமுத்திரகனி, சாய் குமார் நடிப்பில் உருவாகி உள்ள வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது. அதன் ஆடியோ லாஞ்ச் வரும் பிப்ரவரி 4ம் தேதி சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் ஏற்கனவே வெளியான வா வாத்தி மற்றும் நாடோடி மன்னன் பாடல்கள் ஹிட்டடித்த நிலையில், மீதமுள்ள பாடல்கள் வெளியாக உள்ளன.