சினிமா செய்திகள்
ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்: விரைவில் ரிலீஸ்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் மொத்தம் பதினோரு படங்கள் உருவாகி வரும் நிலையில் அவற்றில் பாதி படங்களுக்கும் மேல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படங்களின் ரிலீஸ் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாமல் இருந்தது
அந்த வகையில் ஜிவி பிரகாஷ் நடித்த ’அடங்காதே’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராக இருந்தபோதிலும் சென்சார் பிரச்சினை காரணமாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. முதலில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’ஏ’ சான்றிதழ் தருவதாக கூறியதை அடுத்து ரிவைசிங் கமிட்டிக்கு பட குழுவினர் சென்றனர். தற்போது ரிவைசிங் கமிட்டி இந்த படத்திற்கு ’யுஏ’ சான்றிதழ் தந்துள்ளதை அடுத்து படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இதனையடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜிவி பிரகாஷ் உடன் சரத்குமார் முதன்முதலாக நடித்துள்ள இந்த படத்தில் சுரபி நாயகியாக நடித்துள்ளார். மேலும் மகேந்திர பேடி, தம்பி ராமையா, யோகிபாபு, சிங்கமுத்து உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.























