சினிமா செய்திகள்
கார்த்தியின் கைதி எப்போ ரிலீஸ் தெரியுமா?

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் கைதி திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகிறது.
விஜய்யின் தளபதி 64 படத்தை துவங்குவதற்கு முன்பாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி என்று யாரும் இல்லை. ஒரே நாளில் நடக்கக் கூடிய முக்கியமான சம்பவங்களை வைத்து கைதி படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
அக்டோபரில் படம் வெளியாகிறது என்ற அறிவிப்பை லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலை தள பக்கங்களில் தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் இருந்து தப்பிச் செல்வது போன்ற போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை வருவதால், கைதி அக்டோபர் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் அசுரன் திரைப்படமும் அக்டோபரில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





















