சினிமா
கமல் படங்களை காப்பியடித்து வந்த லோகேஷ் கனகராஜ் இப்போ விஜய்க்காக ரஜினி படத்தை சுட்டுட்டாரா?

கைதி, மாஸ்டர், விக்ரம் என கமல் படங்களையே காப்பியடித்து இயக்கி வந்தார் லோகேஷ் கனகராஜ் என்றும் இவரும் அட்லியும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்றும் ட்ரோல்கள் பறந்து வந்த நிலையில், தற்போது லியோ படத்தின் கதையே ரஜினிகாந்த் படத்தின் காப்பி தான் என என்பது போல பிஸ்மி சொல்லி உள்ள விஷயம் ட்ரோல் மெட்டீரியலாக மாறி உள்ளது.
ஏற்கனவே ரஜினிகாந்தின் பாட்ஷா படத்தை காப்பியடித்து தான் இயக்குநர் அட்லீ தெறி படத்தையே இயக்கினார் என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை பங்கமாக கலாய்த்தனர்.

#image_title
மெர்சல் படமும் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தின் அப்பட்டமான காப்பி தான் என்பதை அறிந்து கமலே கடுப்பான சம்பவமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஷாருக்கானின் சக்தே படத்தை காப்பியடித்து பிகில் படத்தை இயக்கி ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கும் வாய்ப்பையே அட்லீ பிடித்து டாப் இயக்குநராக ஆன நிலையில், அதே பாணியில் முன்னணி இயக்குநராக மாறி வருகிறார் லோகேஷ் கனகராஜ் என கலாய்த்து வருகின்றனர்.

#image_title
ரஜினிகாந்தை தனது படங்களில் ரெஃபரன்ஸாக வைத்து ஸ்டாரான விஜய் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கே ஆசைப்பட்டு வருகிறார் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், ரஜினிகாந்தின் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டான பாட்ஷா படத்தை மீண்டும் காப்பியடித்து லியோ படத்தை உருவாக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ் என பிஸ்மி தகவல் தெரிவித்துள்ளார்.
ஒரு இடத்தில் பெரிய சம்பவத்தை செய்து விட்டு இன்னொரு இடத்தில் அப்பாவியான பேக்கரி (தெறி) நடத்தி வரும் விஜய்யை பழிவாங்க பல கேங் தேடி வர ஒவ்வொரு கேங்கையும் காலி பண்ணும் கதை தான் லியோ படத்தின் கதை என்கின்றனர்.