சினிமா செய்திகள்
நடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு!

இளைஞர்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸ் மற்றும் டிபியாக தற்போது மாறியுள்ள ஹாட் வைரல் புகைப்படம் எதுவென்றால், அது ரம்யா பாண்டியனின் அந்த வளைவு நெலிவு கொண்ட இடுப்பு புகைப்படம் தான்.
ஒரே போட்டோஷூட்டில் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களையும் ஈர்த்துவிட்டார்.
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் என திரும்பிய பக்கம் எல்லாம், அம்மணியின் புகைப்படத்தை பதிவிட்டு, கவிதைகள், மீம்ஸ்கள் குவிந்து வருகிறது.
இப்படி வைரலாகி வரும் ரம்யா பாண்டியன் யார் என்று பார்த்தால், அட, நம்ம ஜோக்கர் படத்தில் நாயகியாக நடித்த அந்த குடும்ப பாங்கான பெண்ணா என்ற கேள்வி தான் எழுகிறது.
ஜோக்கர், ஆண் தேவதை போன்ற கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் சிறப்பாக ரம்யா பாண்டியன் நடித்தாலும், யாருமே தன்னை திரும்பி பார்க்கவில்லை என்று நினைத்து ஏங்கிய, அவர், தற்போது ஒரு பத்திரிகைக்காக எடுத்த போட்டோஷூட்டால் வைரலாகி வருகிறார்.






















