சினிமா செய்திகள்
அடுத்த LCU ! ஆரவாரத்துடன் தொடங்கியது ‘பென்ஸ்’!
பேஷன் ஸ்டுடியோஸ, ஜி ஸ்குவாட் & தி ரூட் புரொடக்ஷன் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் வழங்கும், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில், நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘பென்ஸ்’ படம் பூஜையுடன் தொடங்கியது!*
தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்கள் ஒன்றாக இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவது எளிதானது கிடையாது. அதற்கான சரியான திரைக்கதையும் அதை சரியாக படமாக்குவதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘LCU’ (Lokesh Cinematic Universe) என்ற புதிய சினிமா உலகத்தை உருவாக்கியுள்ளார். அதை சுற்றி சிறு செய்திகள் வந்தால் கூட ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
இந்த சினிமாடிக் யுனிவர்ஸில் அடுத்த புதிய என்ட்ரிக்கான நேரம் இது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் இணைந்து தயாரிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது. நடிகர் ராகவா லாரன்ஸ், இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் இந்தப் பூஜையில் கலந்து கொண்டனர்.
ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும் மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களில் முன்னணி கதாநாயகர்களும் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

















