சினிமா
அயலான் படத்துக்கு ஆப்பு வைக்குமா ஜிகர்தண்டா 2? இதுவும் தீபாவளி ரிலீஸ் தானாம்!

இந்த தீபாவளிக்கும் பெரிய படங்கள் ஏதும் வரப்போவதில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. சிவகார்த்திகேயனின் அயலான் ஏற்கனவே தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படமும் இந்த ஆண்டு தீபாவளி வெளியீடு என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் மாவீரன், ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ உள்ளிட்ட பெரிய படங்கள் தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகின்றன.

#image_title
கமல்ஹாசனின் இந்தியன் 2, சூர்யாவின் கங்குவா, அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட படங்கள் இந்த ஆண்டு வெளியாகுமா அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு போட்டி போடுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பல ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் ஒருவழியாக இந்த ஆண்டு தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஃபயரான வீடியோ ஒன்றை வெளியிட்டு ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு தியேட்டரில் சரவெடியாக வெடிக்கப் போகுது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

#image_title
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் அல்லது அயலான் இரு படங்கள் ஒரே நாளில் மோத உள்ள நிலையில், எந்த படத்துக்கு வெற்றி கிடைக்கும் என வெயிட் பண்ணிப் பார்ப்போம். கார்த்தியின் ஜப்பான் உள்ளிட்ட மேலும், சில படங்களும் இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என தெரிகிறது.