இந்தியா
நேரடியாக சந்தைக்கு வருகிறது கோவிஷீல்டு, கோவாக்சின்: என்ன விலை தெரியுமா?

இதுவரை மத்திய அரசு மட்டுமே மாநிலங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை வழங்கி வந்த நிலையில் தற்போது நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. இந்த தடுப்பூசிகளை மத்திய அரசு மொத்தமாக தடுப்பூசி நிறுவனத்திலிருந்து வாங்கி மாநில அரசுகளுக்கும் மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும் நேரடியாக அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது சில நிபந்தனைகளுடன் மருந்து பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை நேரடியாக சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. இதனால் இனி மத்திய அரசை எதிர்பார்க்காமல் நேரடியாகவே சந்தையில் தடுப்பூசியை வாங்கி செலுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் விலை 500 ரூபாயாக இருக்கலாம் என்று கூறப்பட்டாலும் இதன் விலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் இந்த தடுப்பூசியின் விலை குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டுமே சந்தையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியை விற்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












