சினிமா செய்திகள்
’பீஸ்ட்’ படத்தின் அரபிகுத்து பாடல் ரிலீஸ்

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தின் அரபிகுத்து இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அந்த பாடல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் இந்த ரொமான்ஸ் பாடல் மிகச்சரியாக காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது பொருத்தமானதாக கருதப்படுகிறது
பிரம்மாண்டமான செட் அமைப்பில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி குரலில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த பாடல் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் போல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது