சினிமா
60 நிமிடங்களில் 12 லட்சம் வியூஸ்.. அடிச்சி தூக்கிய அரபிக்குத்து பாடல் வீடியோ….
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் அரபிக்குத்து பாடல் வரிகள் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. சன் பிக்சர்ஸின் டிவிட்டர் மற்றும் விஜயின் டிவிட்டர் பக்கங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டது.
விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடனமாடும் இந்த ரொமான்ஸ் பாடல் மிகச்சரியாக காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது பொருத்தமானதாக கருதப்படுகிறது பிரம்மாண்டமான செட் அமைப்பில் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி குரலில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனவே, இந்த பாடல் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல் போல் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த பாடல் வெளியாகி ஒரு மணி நேரத்தில் சுமார் 12 லட்சம் பேர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். அரை மணி நேரத்திலேயே இப்பாடலை சுமார் 10 லட்சம் பேர் வரை பார்த்து சாதனை படைத்துவிட்டது இந்த வீடியோ.