வீடியோ செய்திகள்
விடுதியில் தூங்கியவரை தட்டி எழுப்பிய கரடி.. நடந்தது என்ன?

தங்கும் விடுதியில் தூங்கிக்கொண்டு இருந்தவரை கரடி தட்டி எழுப்பிய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் வனப்பகுதியை ஒட்டியிருந்த இருந்த நீச்சல் குளம் அருகில் தூங்கிக்கொண்டு இருந்த மேத்யூ பேட் என்பவரைக் கரடி தட்டி எழுப்பியுள்ளது.
யார் தன்னை தட்டி எழுப்புவது என்று பார்த்த போது கரடி என அறிந்து கூச்சலிட்டுக் கத்த, கரடி அங்கு இருந்து ஓடிச் சென்றுள்ளது.
இந்த சிசிடிவி காட்சியை சமூக வலைத்தளங்களில் பகிர அது வைரலாகி வருகிறது.