வீடியோ
105 கிலோ சிம்பு 72 கிலோவானது எப்படி..? கண்ணீர் வர வழைக்கும் வீடியோ!
Published
12 months agoon
By
Tamilarasu
சிம்பு தனது 39வது பிறந்தநாள் அன்று தோல்வியில் உள்ள பலரை ஊக்குவிக்கும் வகையில், 105 கிலோவில் இருந்த இவரது உடல் எடையை 72 கிலோவாகக் குறைத்தது எப்படி என கூறும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்தால் உடல் எடையை 10 நாளில் குறைக்கலாம், 30 நாட்களில் குறைக்கலாம் எனக் கூறுவது எல்லாம் வெறும் கதை. உடல் எடையைக் குறைக்க நடைப்பயிற்சி முதல் நடனம் வரை எவ்வளவு உழைப்பு வேண்டும்? அது எவ்வளவு கடினம்? எப்படி விடா முயற்சி தேவை? என பல்வேறு வகையில் பார்ப்பவர்களை இந்த வீடியோ ஊக்குவிக்கும்.
கொரோணா முதல் அலைக்கு முன்பு சிம்பு 105 கிலோ எடையிலிருந்தர். வந்தால் ராஜாவாகத்தான் வருவேன், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் சிம்பு நடித்து இருந்த போது நடனம் ஆட முடியாமல், ஓட முடியாமல் நடித்து இருப்பதைப் பார்த்துக் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
ஆனால் கொரோனா முதல் அலை முடியும் போது சிம்பு ஊரடங்கு காலத்தில் நான் ஒன்றும் சும்மா இல்லை என, பெல்லி டூ ஒல்லியாகத் திரும்பி வந்தார். சிம்பு 20 வயதில் எப்படி இருந்தாரோ அப்படி திரும்பி வந்துள்ளார் என அவரது கூறினர்.
மறுபக்கம் சிம்பு ஆப்ரேஷன் செய்து தனது உடலைக் குறைத்துள்ளார் என்னவெல்லாம் செய்திகள் பரவின. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் சிம்பு எப்படி தனது உடல் எடையைக் குறைத்தார் என்பதற்கான வீடியோ வியாழக்கிழமை வெளியாகியுள்ளது.
இந்த வீடியோ உடல் எடையை குறைக்க வேண்டும் என கூறுபவர்கள் மட்டுமல்ல, தனது வாழ்க்கையில் வெற்றி வேண்டும் என கூறுபவர்களுக்கும் உத்வேகம் அளிக்கும்.
உன்னால் முடியாது என கூறுபவர்களுக்கு, என்னால் முடியும் என நிரூபிக்க சிம்புவின் இந்த வீடியோவை பாருங்கள். கண்டிப்பாக உங்களுக்கு இந்த வீடியோ உத்வேகம் அளிக்கும். கண்ணீரைக் கூட வர வைக்கலாம்.
சிம்பு ஆத்மன் ஆனது எப்படி? வீடியோவை பாருங்கள்..!
You may like
-
என் மகன் சிம்புவுக்கு பெண் பார்க்க அவர் ஒருவரால் தான் முடியும்: டி ராஜேந்தர் பேட்டி
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை
-
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம்: சூப்பர் அறிவிப்பு!
-
நயன்தாரா பாணியில் புத்திசாலித்தனமாக செயல்படும் சிம்பு!
-
விஸ்வரூபம் எடுக்கும் ‘தமிழ்’ பிரச்சனை: அனிருத், சிம்பு டுவிட்!