சினிமா செய்திகள்
அருண் விஜய்யின் மாஃபியா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

அஜித்தின் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அருண் விஜய்க்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல கம்பேக் கிடைத்துள்ளது. செக்கச்சிவந்த வானம், அண்மையில் வெளியான தடம் என அருண் விஜய் ஸ்கோர் செய்து வருகிறார்.
இந்நிலையில், லைகா தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படத்தில் அருண்விஜய் கமீட் ஆகியுள்ளார். அந்த படத்திற்கு மாஃபியா என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தை துருவங்கள் பதினாறு, நரகாசூரன் படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார்.
மாஃபியா சேப்டர் 1 என படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டிருப்பதால், கேஜிஎஃப் படத்தை போல பல பாகங்களுடன் படம் வேற லெவலில் உருவாகவுள்ளது என தெரிகிறது.















