சினிமா செய்திகள்
பிக்பாஸ் சீசன் 3ல் முதல் ஆளாக வெளியேறப்போவது இவர்தான்?

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 2 சீசன்களை முடித்து, 3வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த முறை தெரிந்த முகங்கள் நிறைய பேர் இருந்தாலும், ரசிகர்கள் அதிகம் விரும்பும் முகமாக லாஸ்லியா மட்டுமே இதுவரை இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வார இறுதியில் நடைபெறும் வெளியேற்ற படலத்தில் வெளியேறப்போவது ஜாங்கிரி மதுமிதா என்றே பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால், சரவணன் தான் இந்த வாரம் வெளியேறுவார் என்றொரு தகவல் கசிந்துள்ளது.
மீரா, மதுமிதா, கவின், சரவணன், சேரன் மற்றும் லாஸ்லியாவின் பெயர்கள் நாமினேஷனில் இடம்பெற்று இருந்தாலும், இந்த வாரம் சரவணன் வெளியேறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என தெரிகிறது.
லாஸ்லியாவுக்கு இருக்கும் ஆர்மி நிச்சயம் அவரை இறுதி வரை கொண்டு சென்று, ரன்னர் அப் ஆக மாற்றி விட்டு, வேறு ஒருவருக்கு டைட்டிலை பிக்பாஸ் வழக்கம் போல் கொடுக்கும் என்பது தெரிந்த விசயம் என்றாலும், நிகழ்ச்சியில் நடைபெறும் குழாயடி சண்டைகளையும், அழகு பதுமைகளின் அரைகுறை ஆடை பேஷன் ஷோக்களையும் இன்னும் 3 மாதங்களுக்கு கண்டு ரசியுங்கள்.















