தமிழ்நாடு
நடிகர் அஜித் தந்தை மரணம்: நேரில் சென்று ஆறுதல் கூறிய நடிகர் விஜய்!

பிரபல நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியன் இன்று அதிகாலை 4:30 மணியளவில் உடல்நலக்குறைவால் காலமானார். 85 வயதான அவர் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை உயிரிழந்த அவரது உடல் சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது மறைவிற்கு பிரபல நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

#image_title
நடிகர் அஜித்தின் தந்தை மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தந்தையின் இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என அஜித் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது.
இந்நிலையில், தந்தையை இழந்த நடிகர் அஜித்தின் வீட்டிற்கு பிரபல போட்டி நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.