தமிழ்நாடு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித் வாழ்த்து!

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் தந்தையை இழந்த நடிகர் அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறியநிலையில் அவருக்கு நடிகர் அஜித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

#image_title
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடலநலக்குறைவால் கடந்த 24-ந் தேதி காலமானர். அவரது மறைவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இரங்கல் குறிப்பில், தன்னைத்தானே தகவமைத்து கொண்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், அன்புச்சகோதரர் அஜித்குமார் அவர்களின் தந்தை பி.சுப்ரமணியம் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தந்தையை இழந்து வாடும் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தார்
இந்த நிலையில், தந்தை மறைவுக்கு நடிகர் அஜித்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எடப்பாடி பழனிசாமி இன்று ஆறுதல் கூறினார். அதனை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடிகர் அஜித்குமார் தொலைபேசி வாயிலாக வாழ்த்து கூறினார்.