சினிமா
‘பொன்னியின் செல்வன்2’: குந்தவைக்கு ட்வீட் செய்த வந்தியத்தேவன்!

‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களாக மாறி கார்த்தியும், த்ரிஷாவும் ட்வீட் செய்துள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
‘பொன்னியின் செல்வன்2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி படக்குழு தற்போது புரோமோஷன் பணிகளில் இறங்கி உள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கி என பான் இந்தியா வெளியீடாக வர இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர்.

#image_title
இப்போது படத்தில் இருந்து முதல் பாடலான ‘அகநக’ வெளியாகி இருக்கிறது. இதற்காக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்த கார்த்தியும், குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவும் பாடல் குறித்து ‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களாகவே மாறி ட்வீட் செய்துள்ள உரையாடல் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இளையபிராட்டி… hi’ என பதிவிட்டிருந்தார். தொடர்ந்து பதில் வராத நிலையில், ‘என்ன பதிலே இல்லை’ என குறிப்பிட்டிருந்தார். அதற்கு த்ரிஷா, ‘என்ன வாணர்குல இளவரசே?’ என கேட்க, ‘தங்கள் தரிசனம் கிடைக்குமா ?’ என கார்த்தி கூறியிருந்தார். தொடர்ந்து த்ரிஷா, ‘ம்ம்ம்…யோசித்து செய்தி அனுப்புகிறேன்’ என பதிலளித்திருந்தார்.
‘கடல் கடந்து சென்று உங்கள் ஆணையை நிறைவேற்றிவிட்டு வருபவனுக்கு மோரை மட்டும் கொடுத்து அனுப்பி விடமாட்டீர்களே.. ?’ என கார்த்தி கேட்க, ‘வேறென்ன வேண்டும் வந்தியத்தேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகுறீர்களா ?’ என்ற த்ரிஷாவின் பதிலுக்கு, ‘ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்” என்றார். இறுதியாக த்ரிஷா, ‘வீரரே பாடல் எப்போதோ ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்” என்ற இருவரும் பேசி இருக்கின்றனர்.