Connect with us

தமிழ்நாடு

மீண்டும் திமுகவில் இணைகிறாரா குஷ்பு? பரபரப்பு தகவல்கள்!

Published

on

திமுக, காங்கிரஸ் மற்றும் பாஜக என மாறி மாறி அரசியல் செய்து வரும் குஷ்பு தற்போது மீண்டும் திமுகவில் சேர இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை குஷ்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுகவில் நல்ல செல்வாக்கு இருந்த நிலையில் திடீரென ஸ்டாலினுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததால், கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோர்களுக்கு குஷ்பு நெருக்கமாக இருந்தாலும் அவருக்கு எம்எல்ஏ, எம்பி என எந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியுடன் மோதல் போக்கு ஏற்பட்டதால் அவர் அந்தக் கட்சியிலிருந்து விலகினார்.

தற்போது பாஜகவில் இருக்கும் அவருக்கு சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் பாஜகவினர் மற்றும் அதிமுகவினரின் ஒத்துழைப்பு இல்லை என்பதால் அவர் அந்த தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் திமுகவில் சேர இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க தனது திமுகவில் நெருக்கமாக உள்ளவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் முதல்வரை சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் குஷ்புவை திமுகவில் சேர்க்க பலர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் குறிப்பாக முதல்வரின் குடும்பத்தில் உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் ஒரு வதந்தி அரசியல் வட்டாரங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா16 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா17 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா19 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா19 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா20 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 31.10.2026

இந்தியா2 நாட்கள் ago

தங்கம் விலையில் அதிரடி சரிவு! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,480 குறைவு – வெள்ளி விலையும் வீழ்ச்சி!

Translate »
Strong contextual links.