தமிழ்நாடு
இன்றும் உயர்ந்தது தங்கம் விலை: ஒரு கிராமுக்கு ரூ.13 உயர்ந்ததால் அதிர்ச்சி

சர்வதேச சந்தையில் தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதை அடுத்து சென்னையிலும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்ததை ஏற்கனவே பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூபாய் 13 உயர்ந்துள்ளது தங்கநகை பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. சென்னையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4518.00 என்ற விலையில் விற்பனை ஆகி வந்த நிலையில் இன்று 13 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 4531.00 என விற்பனையாகி வருகிறது
அதேபோல் சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூபாய் 36144.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று சவரன் ஒன்றுக்கு ரூபாய் 104 உயர்ந்ததை அடுத்து ஒரு சவரன் விலை ரூபாய் 36248.00 என விற்பனையாகி வருகிறது. அதே போல் சென்னையில் 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் விலை ரூபாய் 4891.00 என்றும் ஒரு சவரன் விலை ரூபாய் 39128.00 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் சென்னையில் இன்று வெள்ளி விலை 40 காசுகள் கிராமுக்கு குறைந்து உள்ளதை அடுத்து ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 73.90 எனவும் ஒரு கிலோ விலை ரூபாய் 73900.00 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த வாரத்தில் தங்கம் விலை இன்னும் விலை உயர வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் கூறி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


















