சினிமா
மாரிசெல்வராஜ் படத்திற்குத் தயாராகும் துருவ் விக்ரம்?

நடிகர் துருவ் விக்ரம் மாரி செல்வராஜ் படத்திற்குத் தயாராகி வருகிறார்.
‘மாமன்னன்’, ‘வாழை’ ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ்ஜின் அடுத்தப் படம் குறித்தான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உள்ளது. இதற்கு முன்பே, மாரி செல்வராஜ் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து உருவாக இருக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியிட்டார்கள்.

Dhuruv Vikram – Mariselvaraj
அதற்கு பிறகு மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ படத்தின் ப்ரீ- புரொடக்ஷன் பணிகளிலும், ‘வாழை’ படத்தின் இயக்கத்திலும் பிஸியாக இருந்தார். இதற்கிடையில் நடிகர் துருவ் விக்ரம் அவரது இசை ஆல்பம் வெளியீட்டு பணிகளில் கவனம் செலுத்தி வந்தார். இப்பொழுது ‘வாழை’ பட வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக நடிகர் துருவ் விக்ரம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கபடியை மையமாகக் கொண்டு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதை குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.