சினிமா செய்திகள்
உதயநிதி ஸ்டாலின் அடுத்த படம்: இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் டைட்டில் அறிவிப்பு!

உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்க உள்ளார். ஏஆர் ரகுமான் இசையமைக்க உள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு மற்றும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரும் நடிக்க உள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் முதல் முறையாக இணைந்துள்ள இந்த படத்திற்கு ’மாமன்னன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
உதயநிதியின் அடுத்த பட அறிவிப்பில் திரையுலக பிரபலங்கள் இணைந்துள்ளதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட் திரையுலகினர் தெரிவித்துள்ளனர்.
Excited to announce our next, #MAAMANNAN directed by @mari_selvaraj, starring @Udhaystalin @KeerthyOfficial #FahadhFaasil #Vadivelu and music by @arrahman ????????????@RedGiantMovies_ @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/BICc9DXnD4
— Red Giant Movies (@RedGiantMovies_) March 4, 2022
















