சினிமா
‘சூர்யா 42’ டைட்டில் டீசர் வெளியீடு எப்போது?

நடிகர் சூர்யா நடித்து வரக்கூடிய ‘சூர்யா42’ படத்தின் டைட்டில் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தற்போது ‘சிறுத்த’ சிவா இயக்கத்தில் தனது 42வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக இதற்கு ‘சூர்யா 42’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. பீரியாடிக் ட்ராமாவாக உருவாகி வரக்கூடிய இந்தப் பான் இந்தியா படத்தில், நடிகர் சூர்யா கிட்டத்தட்ட ஐந்து கெட்டப்களில் நடிக்கிறார்.

#image_title
மேலும், கிட்டத்தட்ட 10 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தின் ப்ரீ பிசினஸ் கிட்டத்தட்ட 500 கோடியை எட்டியுள்ளது. இது ‘லியோ’ படத்தின் ப்ரீ பிசினஸை விட அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திரைப்படம் 3டியிலும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு எப்போது வெளியிட இருக்கிறது என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அதாவது ஏப்ரல் மாதம் 14ம் தேதி ஹைதராபாத்தில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்டமான ஆடியோ வெளியீட்டு விழாத் திட்டங்கள் உருவாகி வருகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும்.