சினிமா
ராம்சரண்- ஷங்கர் இணையும் புதிய படத்தின் தலைப்பு என்ன?

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் நடித்து வரும் படத்தின் தலைப்பு குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம்சரண் இணைந்திருக்கும் பதினைந்தாவது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்திற்கு தற்கலிகமாக ‘RC 15’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு குறித்தான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

Ramcharan Shankar
இதற்கு ‘சிஇஓ’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் ‘இந்தியன்2’ திரைப்படம் இந்த வருட தீபாவளி அல்லது அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இதற்குள் ராம்சரண் படத்தையும் முடித்துவிட்டு, விரைவில் இரண்டு படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் ஒரே நேரத்தில் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.
ராம்சரண் படத்தின் தலைப்பு குறித்து தற்போது வெளியாகி உள்ளவதால் அதனை உறுதிப்படுத்தி, படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.
‘இந்தியன்2’ முடித்துவிட்டு அடுத்து நடிகர் கமல்ஹாசன் ஹெச். வினோத் இயக்கும் படத்தில் இணைய இருக்கிறார்.