சினிமா
தேவர்மகன் காப்பியா? மாமன்னன் போஸ்டரை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அரசியல்வாதியாக இருக்கும் வடிவேலு கோட் சூட் போட்டுக் கொண்டு ஃபாரினில் படித்து விட்டு ஊர் திரும்பும் தனது மகனை அரசியல்வாதியாக ஆக்கும் கதையைத்தான் இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் எடுத்து இருக்கிறாரா? என ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பை முன்னிட்டு வெளியான போஸ்டரை பார்த்தே ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் சிறந்த இயக்குநர் என்கிற பெயரைப் பெற்றுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

#image_title
மூன்றாவது படமாக சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் படத்தை மாரி செல்வராஜ் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கடைசியில், திடீரென உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் படத்தை இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ்.
உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் அரசியல் படமாக மாமன்னன் உருவாகி உள்ளது. ஷூட்டிங் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகும் நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் நிறைவடைந்து படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், மே 1ம் தேதி மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிப்பு போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.

#image_title
அதில், ஒரு பக்கத்தில் வடிவேலு வேட்டி சட்டையில் அரசியல்வாதியாகவும், இன்னொரு பக்கம் கோட் சூட் மாட்டிக் கொண்டு உதயநிதி ஸ்டாலினும் நிற்பதை பார்த்த ரசிகர்கள் மீண்டும் ஒரு தேவர்மகன் ஸ்டைல் படமா? என்றும் தேவர் மகனை காப்பியடித்து மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தை இயக்கி உள்ளாரா? என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன் படங்களை தொடர்ந்து உதயநிதிக்கு இந்த படமும் நல்லதொரு பெயரையும் அவரது அரசியல் எதிர்காலத்துக்கான படமாகவும் இருக்கும் என அவரது ரசிகர்கள் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக வெயிட் செய்து வருகின்றனர்.

#image_title
உதயநிதி ஸ்டாலின் படத்தின் அப்டேட் எல்லாம் மே 1ம் தேதி வெளியாகப் போவதாக அறிவிப்பு வெளியாகி விட்டது இன்னும் ஏகே 62 படத்தின் அப்டேட் இருக்கா? இல்லையா? என லைகா வாயே திறக்கவில்லையே என விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்களை பங்கம் பண்ணி வருகின்றனர்.