சினிமா செய்திகள்
செம ஆட்டம் ஆடிய லாஸ்லியா- ஹர்பஜன் சிங்… வைரல் புகைப்படங்கள்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிகை லாஸ்லியா உடன் இணைந்து நடித்து வரும் தமிழ்ப்படம் ப்ரெண்ட்ஸ்.
ஹர்பஜன் சிங்- லாஸ்லியா ஜோடி உடன் நடிகர் சதிஷ், ‘குக்கு வித் கோமாளி’ பிரபலம் பாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படம் மூலமாகத் தான் ஹர்பஜன், லாஸ்லியா இருவருமே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆக உள்ளனர். ஹர்பஜன் சிங் ஏற்கெனவே ஒரு தமிழ் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்துள்ளார்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் ஹர்பஜன் வேட்டி சட்டையை மடித்துக் கட்டிக்கொண்டு பாவாடை சட்டையில் மின்னும் லாஸ்லியா உடன் சேர்ந்து செம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த கலர்ஃபுல் புகைப்படங்கள் தான் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மே மாதத்துக்குள் ஹர்பஜன்- லாஸ்லியாவின் ப்ரெண்ட்ஸ் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















