விளையாட்டு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் பரபரப்பு… ஹர்பஜன் சிங் விலகல்!

ஐபிஎல் 2020 போட்டியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன் சிங் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 29-ம் தேதி தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். அவரை தொடர்ந்து இன்று சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் விலகுகிறார் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் சுரேஷ் ரெய்னா விலகலுக்குத் தனிப்பட்ட காரணங்கள் என்று கூறப்பட்டது. பின்னர் அவரது மாமா இறப்பு காரணமாக என்று கூறப்பட்டது. அதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தங்கிய அறை வசதிகள் குறித்த விளக்கத்தில் திருப்த்தி இல்லாமல் சுரேஷ் ரெய்னா விலகினார் என்று கூறப்பட்டது.
இப்போது அதே போன்று ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்ற வாரம் இரண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. எனவே அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற கொரோனா தொற்று சோதனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதை அடுத்து இன்று முதல் வலை பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.


















