கிரிக்கெட்
தோல்விக்கு அஸ்வின் தான் காரணம்: ஹர்பஜன் சிங் பாய்ச்சல்!

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதின நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் இந்தியா 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது. இந்திய அணியின் இந்த தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ஆடுகளம் ஆஃப் ஸ்பின்னுக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது. சரியாக ஆடுகளத்தை பயன்படுத்திருந்தால் அஸ்வின் விக்கெட்டுகளை அதிகமாக வீழ்த்தியிருக்கலாம். ஆனால் அதனை இங்கிலாந்து வீரர் மொயீன் அலி சிறப்பாக செய்தார். அஸ்வினை விட மொயீன் அலி இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசியதே இந்தியாவின் தோல்விக்கு காரணம்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய பந்து வீச்சாளர்களை விட சிறப்பாக செயல்படுவதை முதன்முறையாக பார்க்கிறேன். இந்த ஆடுகளத்தில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தொடரை இழக்க காரணம் அஸ்வினின் விக்கெட் வீழ்த்த முடியாத இயலாமையே காரணம். அவரது காயம் தீரமாக இருந்திருந்தால் அணி நிர்வாகம் கண்டிப்பாக அதனை அறிந்திருக்கும். இல்லையென்றால் அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதே அர்த்தம் என தெரிவித்தார்.









