இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் – 03.11.2026

- அரசு உயர் பதவிகளுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை இருக்க வேண்டும். முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசினால் அவதூறு வழக்குதான் தாக்கல் செய்ய வேண்டும். வேறு குற்ற வழக்கு பதிவு செய்யக்கூடாது. – போலீசாருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி என்.ரமேஷ் அறிவுறுத்தல்.
- புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவர்களுடன் இன்று பேச்சுவார்த்தை! புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பாக மீனவப் பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. தவெக ஆதரவாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மீனவ மயிலை பஞ்சாயத்தார் குற்றச்சாட்டு! அனைத்து மீனவப் பிரதிநிதிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
- கடன் தொல்லை காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டால் சம்பந்தப்பட்ட கடன் நிறுவனஙகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படும். அவர்களது மகள்களின் திருமணச் செலவை சிவசேனா ஏற்றுக்கொள்ளும். – மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.
- பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என இடைக்காலத் தடை விதித்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்!
- சொத்துக் குவிப்பு வழக்கில் தவெக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு ED மீண்டும் சம்மன். 2016-21 அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ED விசாரணை. DVAC குற்றப் பத்திரிக்கையில் ரூ.35.79 கோடி சொத்துக்களை குவித்ததாக பதிவு.
- சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் அனுமதியின்றி செயல்படும் 87 ரிசார்ட்டுகளையும் உடனடியாக மூடவும், அடுத்தகட்டமாக கட்டடங்களை இடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு நவம்பர் 27க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு.
- லைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல்துறையின் அத்துமீறல் குறித்த வழக்குகள் இன்று (நவ.3) உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.
