Connect with us

ஆரோக்கியம்

பற்பசையில் எந்த நிறம் ஆபத்தானது? வெண்மை தேடுவதில் ஆபத்து…

Published

on

நீண்ட காலமாக வெண்மை நிறத்தில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த பற்பசை மற்றும் பற்பொடிகள் இப்போதெல்லாம் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கின்றன. பல்வேறு வண்ணங்கள் மட்டுமல்ல பல்வேறு மணங்களிலும் கிடைக்கின்றன.

இயற்கையிலேயே நமது பற்களுக்கு வெண்மை நிறம் இல்லை. வெளிர் மஞ்சள் நிறம்தான் இயற்கை கொடுத்தது. நாம்தான் பற்பசை பற்பொடி விளம்பரங்களை பார்த்து நமது பற்கள் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போலியான விளம்பரங்களை பார்த்து நமது பற்களை வெள்ளையாக்குகிறேன் பேர்வழி என்று கண்ட கண்ட பற்பசைகளை உபயோகித்து நமது பற்களின் எனாமல் போய் ஈறு வீங்கி பல் கூச்சம் ஏற்பட்டு அவதி அடைகின்றோம்.

எந்த பற்பசை பயன்படுத்தினால் வெண்மையாகும் என்று சிந்திப்பதை விட்டு பற்களை ஆரோக்கியமாக பாதுகாப்பது எப்படி என்று சிந்தித்தால் நல்லது.

பெரும்பாலான பற்பசைகள் வெண்மையாக இருக்கும். இதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் ப்ளீச்சிங் அல்லது அதில் உள்ள பிற கெமிக்கல் பொருட்கள் ஆகம்.

பற்சிப்பி கால்சியம் பாஸ்பேட் பெராக்சைடு போன்ற கனிமங்களால் ஆனது. அதிகப்படியான இனிப்புகள் நிறம் ஏற்றப்பட்ட ஜங்க் ஃபுட்கள் மற்றும் அமிலத்தன்மை கொண்ட உணவுகள் ஆகியவற்றால் நமது பல்லின் எனாமல் பாதிக்கப்பட்டு தொந்தரவுகள் ஏற்படும். பற்கசைகளில் உள்ள பெராக்சைடு போன்ற பொருட்கள் நமது உணர்திறனை தூண்டி பல் நரம்புகளை எர்ச்சல் அடையச் செய்து கூச்ச உணர்வு மற்றும் ஈறு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

பளபளப்பான வெள்ளை பற்கள் இருப்பது மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தோன்றலாம். ஆனால் அவை சிறந்த நிலையில் உள்ளன என்று அர்த்தமல்ல. வெண்மை நிற பற்பசைகளில் சிலிக்கா கால்சியம் கார்பனேட் சவர்க்காரம் ஃப்ளுரைடு ஆகியவை சேர்க்கப்படுகின்றன. உண்மையில் இந்த பற்பசைகள் பற்களை வெண்மையாக்குவதில்லை. அவை வெளிப்புற கறைகளை மட்டும் அகற்றி வெண்மையாகத் தெரிவது போல் தோன்றச் செய்யும்.

சில பற்பசைகளில் மஞ்சள் நிறத்தை எதிர்க்க சேர்க்கப்படும் நீல நிறப்பொருள்கள் பற்கள் வெண்மையாகத் தோன்ற உதவுகின்றன.

வாய் சம்பந்தப்பட்ட ஆரோக்கியத்திற்காகவும் அணைத்து பற்களையும் தேய்த்து சுத்தப்படுத்துவதற்காகவும் தான் இந்த பற்பசை பற்பொடி மற்றம் பல் துலக்கும் பிரஷ்கள்.

இப்படி வெண்மை நிற பற்பசைகள் குறித்து தகவல்கள் வெளியான நிலையில் தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் வயலெட், சிவப்பு, பச்சை, நீலம் என பல வண்ணங்களில் பற்பசைகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இவற்றை பயன்படுத்துவோர் உணர்திறன் அல்லது எரிச்சல் பிரச்னைகளின்போது உடனடியாக பயன்பாட்டை நிறுத்தி பல் மருத்துவரின் வழிகாட்டுதல்களோடு உரிய வழிமுறைகளைப் பின்பற்றுவது சிறந்தது.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Strong contextual links.