Connect with us

ஆரோக்கியம்

ரத்த அழுத்தம் இருக்கா? யோகா செய்யுங்க… தியானம் செய்யுங்க…

Published

on

அதிக எடை அல்லது பருமன் இருப்பதும் நீண்ட கால மனஅழுத்தமும் உங்களது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யலாம். இந்த ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தம் குறை ரத்த அழுத்தம் என இரண்டு வகைப்படும். இபரும்பாலான சமயங்களில் இரண்டுமே கவலைக்குரிய விஷயங்களய்தான் இருக்கின்றன. இந்த பிரச்னையிலிருந்து விடுபட என்ன வழி? வாங்க பார்ப்போம்..

இன்றைய காலகட்டத்தில் நமது உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்னைகளுக்கு பிரதான காரணங்களில் ஒன்று ரத்த அழுத்தமே ஆகும். உலகளவில் மூன்றில் இரண்டு பேர் ரத்த அழுத்த பாதிப்பு உடையவர்களாக இருப்பதாக குறிப்பிடும் ஆய்வறிக்கைகள் நமக்கு அபாய மணியை அடிப்பவையாக இருக்கின்றன. இதன் தாக்கம் சமுதாயத்தில் பல்வேறு நிலைகளில் காணப்படுவதால்தான் நமது அரசாங்கமும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை தொடங்கி மக்களின் வீடுகளுக்கே சென்று பரிசோதனைகள் செய்து மருந்து மாத்திரைகள் கொடுத்து மக்களின் நலனில் அக்கறை எடுத்துக் கொள்கிறது.

ரத்த அழுத்தம் என்பது ரத்த நாளங்களின் சுவர்களுக்கு எதிராக இரத்தம் செலுத்தும் அழுத்தமே ஆகும். நமது இதயம் இரத்தத்தை பம்ப் செய்யும்போது இரத்தம் எடுத்துச் செல்லும் நாளங்களின் இரத்தக் குழாய்களின் சுவர்களில் கொழுப்புகள் உட்பட தேவையில்லாத பொருள்கள் படிவதனால் இரத்தம் எளிதாக சீராக பாயமுடியாமல் தடைப்படும்போது இதயம் இரத்தத்தை சிரமப்பட்டு பம்ப் செய்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்பி வைக்கிறது. இந்த இரத்த அழுத்தத்தினால் சில சமயங்களில் அகால மரணங்களும் நிகழ்கின்றன. இரத்த அழுத்தத்துடன் இணை நோய்களாக இதய நோய் பக்கவாதம் மற்றும் சிறுநீரக நோய் போன்றவையும் ஏற்பட வாய்ப்பு மிக அதிகம். எனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் இருக்கலாம் என நீங்கள் நினைத்தால் உங்கள் மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

இரத்த அழுத்தத்தின் சில அறிகுறிகளாக தலைவலி சோர்வு மயக்கம் பார்வை மங்கலான தன்மை மார்பு வலி போன்றவை தொடர்ச்சியாக இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். நீரிழப்பு குறைந்த இரத்த அழுத்தத்திற்கு ஒரு பொதுவான காரணமாக இருப்பதால் அதிக திரவங்களை எடுத்துக் கொள்வது நல்லது. உப்பு உடலில் தண்ணீரை தக்க வைக்க உதவுவதால் உணவுகளில் போதுமான அளவு உப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. இறுக்கமான ஆடைகள் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துவதால் தளர்வான ஆடைகளை அணியுங்கள். நீண்ட நேரம் அமர்ந்திருந்த பிறகு அல்லது படுத்திருந்த பிறகு மெதுவாக எழுந்திருப்பதன் மூலம் திடீர் இரத்த அழுத்த பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

ஆரோக்கியமான உணவுகளான பழங்கள் காய்கறிகள் முழுதானியங்கள் மற்றும் கொழுப்பு குறைவான பால்பொருள்கள் உண்ண வேண்டும். அதிக உப்பு கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். வாரத்தில் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கும் விதமாக யோகா தியானம் அல்லது ஆழமான சுவாச பயிற்சிகள் செய்து மன அழுத்தத்தை சரிசெய்து உங்கள் உடல்நலனை பார்த்துக் கொள்ள வேண்டும்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Translate »
Dankzij de capaciteit van onze fabriek om grote volumes katoenen canvas tassen en trekkoordtassen te produceren.