இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 17.12.2025

- டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் ரூ.91.01 ஆக சரிவடைந்தது.
- காப்பீட்டுத் துறையில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது.
- ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் ஐதராபாத்தைச் சேர்ந்த இந்தியர் என புலனாய்வுத் துறை அறிவிப்பு
- விளையாட்டு அலுவலர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 – துணை முதல்வர் உயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தங்கம் விலை கிராமிற்கு ரூ.50 உயர்ந்து சவரன் ரூ.99200 ஆக விற்பனை ஆகிறது.
- வெள்ளி விலை கிராமிற்கு ரூ.11 உயர்ந்து ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.222000க்க விற்பளை அகிறது.
- கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தற்காலிக போர் நிறுத்தத்தை நிராகரித்தது ரஷ்யா.
- ஜனவரி 2026ல் 6ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் ககூட்டத் தொடர் தொடங்க உள்ளது.
- ஈரான் கடற்கரை மணலில் Iron Oxide அதிகமாக இருப்பதால் மழையின் போது கடல் நிவப்பு நிறத்திற்கு மாறியது.
- பீகாரில் தேர்தலின் போது ஆண்கள் வங்கி கணக்கில் தவறாக வரவு வைக்கப்பட்ட ரூ.10000த்தை திருப்பி அளிக்க அறிவுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
- கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு பயன்படுத்தப்படும் நைட்ரோஃப்பயுரான் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்தில் புற்று நோய் காரணிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே முட்டையிலும் இறைச்சியிலும் இந்த புற்றுநோய் காரணிகள் உள்ளனவா என ஆய்வுப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.
