Connect with us

இந்தியா

100 வேலை நாள் திட்டத்திற்கு பெயர் மாற்றம் – அறிமுக நிலையிலேயே எதிர்க்க எதிர்கட்சிகள் மும்முரம்

Published

on

ஏரி வேலை என்றும் நூறு நாள் வேலை என்றும் எளிய மக்களால் அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் 2005ம் ஆண்டு அப்போதைய மன்மோகன் அரசால் கொண்டு வரப்பட்டு கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு 100 நாட்கள் ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக கொண்டு வரப்பட்டது.

இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு முழுமையான நிதி ஒதுக்கீட்டை வழங்கி வந்தது. பின்னர் வந்த மோடி அரசு இத்திட்டத்திற்கான நிதியை ஒன்றிய அரின் பங்கு 73 சதவீதம் எனவும் மாநில அரசின் பங்களிப்பு 27 சதவீதம் எனவும் 2016-17ம் ஆண்டுகளில் மாற்றியது.  சமீப நாட்களாக இதற்கான ஒன்றிய அரசின் பங்களிப்பு நிதி சரவர கிடைப்பதில்லை என பல மாநில அரசாங்கங்கள் குறை கூறி வருகின்றன.

இந்த நிலையில் இந்த திட்டத்தின் பெயரிலுள்ள மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி விட்டு திட்டத்தின் பெயரை “விக்சித் பாரத் ஜி ராம் ஜி“ என மாற்றிட ஒரு புதிய மசோதாவை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வருகிறது. இதனை அறிமுக நிலையிலேயே எதிர்க்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்ட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களவைக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் இனி 125 வேலை நாள்கள் வழங்கப்படும் எனவும் ஒன்றிய அரசு கூறியுள்ளது. மேலும் இதற்கான நிதி பங்களிப்புகளில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர உள்ளது. இதன்படி வடகிழக்கு மாநிலங்கள் இமயமலை மாநிலங்கள் யுனியன் பிரதேசங்கள் ஆகிய பகுதிகளில் ஒன்றிய அரசின் பங்கு 90 சதவீதம் எனவும் சம்பந்தப்பட்ட அரசுகளின் பங்கு 10 சதவீமத் எனவும் இருக்கும். சட்டசபை உள்ள மாநிலங்களில் ஒன்றிய அரசின் பங்கு 60 சாவீதம் எனவும் அந்தந்த மாநில அரசுகளின் பங்கு 40 சதவீதம் எனவும் இருக்கும். சட்டசபை இல்லாத யுனியன் பிரதேசங்களில் ஒன்றிய அரசே 100 சதவீத நிதியையும் தரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரருக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்படாவிட்டால் வேலையின்மைப்படி வழங்கப்படும். இத்தொகையை மாநில அரசே செலுத்த வேண்டும்.

விதைப்பு மற்றும் அறுவடை போன்ற உச்ச விவசாய பருவங்களை உள்ளடக்கிய ஒரு காலத்தை மாநில அரசு அறிவிக்கும். அந்தக் காலத்தில் இந்த சட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப் படாது. இது தொடர்பான நாட்களை 60 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் மாநிலங்கள் புதிய சட்டத்தின் விதிகளுக்கு இணங்க ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் 88.57 லட்சம் பேர் பலனடைந்து வருகின்றனர்

இது காங்கிரஸ் கொண்டு வந்த திட்டம் என்பதாலேயே காந்தி பெயர் நீக்கப்படுகிறது என காங்கிரஸ் குற்றம் காட்டி உள்ளது் இம்இசோதாகை ஆரம்ப நிலையிலேயே எதிர்க்க இந்தியா கூட்டணி கட்சியினர் மும்முரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 24.07.2026

பர்சனல் ஃபினான்ஸ்1 நாள் ago

வேலை மாறப் போகிறீர்களா? ராஜினாமா செய்த பிறகு நிறுவனத்தின் மருத்துவக் காப்பீட்டுக்கு என்ன ஆகும்? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 24 ஜூலை 2026 (வெள்ளிக்கிழமை)

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 23.07.2026

விமர்சனம்2 நாட்கள் ago

ஜனநாயகன் திரை விமர்சனம் | Jananayagan Movie Review

இந்தியா2 நாட்கள் ago

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 23.07.2026

Uncategorized3 நாட்கள் ago

தி நெக்ஸ்ட் எகானமி ஃபோரம் 2026 – சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு சர்வதேச விருது! 

சிறு தொழில்3 நாட்கள் ago

சென்னைஸ் அமிர்தா குழுமத் தலைவருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உயரிய கெளரவம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 22.07.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 18.07.2026

சினிமா6 நாட்கள் ago

வைரலாகும் சுசி கணேசனின் ‘ஒரண்ட’

வணிகம்6 நாட்கள் ago

EPF vs PPF: 15 ஆண்டுகளில் எந்த திட்டம் அதிக வருமானம் தரும்? ரூ.1.2 லட்சம் ஆண்டு முதலீட்டின் முழு ஒப்பீடு

சினிமா6 நாட்கள் ago

ஒரண்ட.. சம்பவம் செய்ய வரும் சசி கணேசன்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை – 19 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை):

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 1:12 ஊதிய விகிதம் அமலாகுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வில் புதிய பரிந்துரைகள்!

வார பலன்6 நாட்கள் ago

இந்த வார ராசிபலன் (20 ஜூலை 2026 – 26 ஜூலை 2026)

வணிகம்6 நாட்கள் ago

Senior Citizen FD 2026: மூத்த குடிமக்களுக்கு 8.50% வரை FD வட்டி! அதிக வட்டி தரும் வங்கிகள் முழு பட்டியல்!

வணிகம்6 நாட்கள் ago

NPS புதிய விதி 2026: NPS தொகை தாமதமாக செலுத்தப்பட்டால் வட்டி கிடைக்கும்! மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

காலையில் வயிறு உப்புசமா? இஞ்சி, பெருஞ்சீரகம், எலுமிச்சை, கிரீன் டீ… இந்த 4 இயற்கை வைத்தியங்கள் நிவாரணம் தரும்!

Translate »
חשפניות בתל אביב והמרכז – חשפניות צעירות למסיבות רווקים במרכז או חשפניות בצפון 24/7 💕. ??. Verlage.