இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.04.2026

- வந்தே பாரத் ரயிலில் வழங்கப்பட்ட அமுல் நிறுவனத்தின் தயிர் டப்பாவில் புழுக்கள் இருந்ததாக பயணி ஒருவர் புகார் அளித்தார். இந்தப் புகாரை அடுத்து ஐ.ஆர.சி.டி.சி க்கு ரூ.10 லட்சம் அபராதமும் சமையல் ஒப்பந்ததாரருக்கு ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.100 உயர்ந்து கிராம் ரூ.13950க்கும் சவரன் ரூ.111600க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – மாற்றமின்றி கிராம் ரூ.255க்கம் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.255000க்கம் விற்பனை ஆகிறது.
- ஈரானிடம் எந்த சிக்கலுதின்றி நேரடியாக கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கியதாக ஒன்றிய அரசு அறிவிப்பு.
- ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் TN2026 திரைப்படத்தில் தான் ஒரு பாடல் பாடியிருப்பதாக நடிகர் இளவரசு அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
- ஈரானில் காணாமல் போன அமெரிக்க விமானியை மீட்க உலகின் ஆகக் கொடூரமான பயிற்சிகளை முடித்த அமெரிக்க விமானப்படையின் பாரா-ரெஸ்க்யு கமாண்டோக்கள் ஈரானுக்குள் குதித்துள்ளனர். ஈரானியப்படைகளின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தங்களது விமானியை மீட்க அமெரிக்கா நடத்தும் இந்த திக் திக் ரெஸ்க்யு வேட்டையால் வளைகுடாவில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.
- திருநர்களின் சுய அடையாள உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் புதிய சட்ட திருத்தத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல். திருநர் பாலின அடையாளத்தைப் பெற மருத்துவச் சான்றிதழை கட்டாயமாக்குவது அரசியலமைப்பு வழங்கும் தனிநபர் சுதந்திரத்தை நேரடியாக மீறும் செயல் என மனுதாரர்கள் குற்றச்சாட்டு.












