ஆரோக்கியம்
கெட்ட கொழுப்பை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தவிர்த்தால் இதயம் பாதுகாப்பாகும்!
Published
5 மாதங்கள் agoon
By
Poovizhi
உடல்நலத்தை பாதுகாக்க முக்கியமான விஷயங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும். குறிப்பாக, “கெட்ட கொழுப்பு” எனப்படும் LDL அளவு அதிகரித்தால், அது ரத்த நாளங்களின் சுவர்களில் படிந்து ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் அதிகரிக்கின்றன.
மேலும், கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால் புற்றுநோய் செல்களின் பரவலுக்கும் அது காரணமாக இருக்கலாம் என சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால், தினசரி உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகிறது.
நிபுணர்கள் கூறுவதன்படி, சில உணவுகளை தவிர்ப்பதன் மூலம் உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்க முடியும். அந்த உணவுகள் குறித்து பார்ப்போம்:
1) முட்டை மஞ்சள் (Egg Yolk):
முட்டையின் மஞ்சளில் இயற்கையாகவே அதிக அளவு கொலஸ்ட்ரால் உள்ளது. ஏற்கனவே LDL அதிகமாக இருப்பவர்கள் இதை குறைத்து சாப்பிடுவது நல்லது.
2) வறுத்த உணவுகள் (Fried Foods):
மீண்டும் மீண்டும் சூடாக்கப்பட்ட எண்ணெயில் தயாரிக்கப்படும் உணவுகளில் டிரான்ஸ் ஃபேட் அதிகம் இருக்கும். இது இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
3) ஐஸ்கிரீம் (Ice Cream):
அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட பால் உள்ளதால், இது ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கிறது.
4) பதப்படுத்தப்பட்ட இறைச்சி (Processed Meat):
சிக்கன் பர்கர், ஃபிஷ் ஃபிங்கர் போன்ற உணவுகள் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை.
5) சீஸ் (Cheese):
சாச்சுரேட்டட் ஃபேட் மற்றும் உப்பு அதிகம் உள்ளதால், அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உயரும்.
6) துரித மற்றும் பேக்கரி உணவுகள் (Fast & Bakery Foods):
பீட்சா, பர்கர், கேக், பிஸ்கட் போன்ற உணவுகளில் மைதா, சர்க்கரை மற்றும் ட்ரான்ஸ் ஃபேட் அதிகம். இவை இதய ஆரோக்கியத்திற்கு பாதிப்பானவை.
🥗 சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான உணவுகள்:
கெட்ட கொழுப்பை குறைக்க ஓட்ஸ், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
















